கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆத்தூர், பூலாம்பாளையம், காதப்பாறை, மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, நெரூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 2 கோடியே 99 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க ஏதுவாக மின்கலம் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்க 147 ஊராட்சிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல்கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரூர், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, கடம்பன்குறிச்சி, திருக்காடுதுறை, நஞ்சை புகளூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வேட்டமங்கலம், மண்மங்கலம், நெரூர், ஆத்தூர் சோமூர், நன்னியூர் உள்ளிட்ட 13 ஊராட்சிகளுக்கு ரூ. 64.12 லட்சம் மதிப்பிலான 22 மின்கலம் பொருத்தப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்களை ஊராட்சி தலைவரிடம் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதையும் படிங்க... பிரையன்ட் பூங்காவை சுற்றிப்பார்த்த தூய்மைப் பணியாளர்கள்