ETV Bharat / state

புறா பந்தயப் போட்டி பரிசளிப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு - pigeon race in karur

கரூர்: புறா பந்தயப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

minister-give-the-price-for-those-who-are-winning-in-karur-pigeon-race
author img

By

Published : Aug 26, 2019, 7:40 AM IST

கரூர் நகராட்சியின் முன்னாள் உறுப்பினர் வைரப்பெருமாள் நினைவாக ஐம்பதாவது ஆண்டு புறா பந்தயப் போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மைதானத்தில் கடந்த ஜூலை 19ஆம் தேதி சாதா புறாக்களுக்கான போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. மேலும், ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கர்ண புறாக்களுக்கான பந்தயப் போட்டி நடைபெற்று வந்தது.

அதன் நிறைவு நாளான நேற்று வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். சாதா புறக்களுக்கான போட்டியில் முதல் பரிசு 10,000 ரூபாயை கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய் சங்கர் என்பவருக்கும், மூன்றாம் பரிசு ஜெகன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

புறா பந்தயப் போட்டி பரிசளிப்பு விழா

கர்ண புறா பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற கரூரைச் சேர்ந்த மோகனுக்கு பரிசுத்தொகை ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புறா வளர்ப்போர், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Intro:கரூரில் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா புறா போட்டியை பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பரிசு தொகையை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Body:கரூர் நகராட்சியின் முன்னாள் உறுப்பினர் வைரப்பெருமாள் நினைவாக ஐம்பதாவது ஆண்டு புறா பந்தய போட்டி கரூர் திருவள்ளூர் மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 19 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் சாதா புறா பந்தயப் போட்டி துவங்கியது மேலும் ஆகஸ்ட் மாதம் 23 24 25 தேதிகளில் கர்ண புறா பந்தய போட்டி நடைபெற்றது அதன் நிறைவு நாளான இன்று பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கலந்துகொண்டு பரிசினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.

சாதா புறா போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000 கரூரை சேர்ந்த ரமேஷ் என்பவரும் இரண்டாவது பரிசு சங்கர் ரூபாய் 7000 மூன்றாவது பரிசு 3000 கரூரை சேர்ந்த ஜெகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கர்ண புறா பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கரூரைச் சேர்ந்த மோகன் ரூபாய் 25 ஆயிரம் போட்டியில் பரிசு பெற்ற புறாக்களின் உரிமையாளருக்கு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் புறா வளர்க்கும் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.