கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் எல்லைக்குள்பட்ட சேவகனூர் பகுதியில் பால் வியாபாரம் செய்து வருபவர் பாஸ்கரன் மகன் முத்துராஜா (25),
இவர், அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மணி(27) என்பவருடன் சேர்ந்து தாராபுரத்தானூரில் உள்ள உறவினர் வீடு அருகே சாராய ஊறல் போட்டுள்ள்ளார்.
இதுதொடர்பான ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற மாயனூர் காவல்துறையினர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராயத்தை அழித்தனர்.
![சாராய ஊறல் போட்ட பால் வியாபாரி கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:04:26:1622720066_tn-krr-04-milk-marchant-prepare-spirit-arrest-crime-news-pic-scr-tn10050_03062021165353_0306f_1622719433_638.jpg)
பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கரூர் மாவட்ட எஸ்பி சாசாங் சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![சாராய ஊறல் போட்ட பால் வியாபாரி கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:04:24:1622720064_tn-krr-04-milk-marchant-prepare-spirit-arrest-crime-news-pic-scr-tn10050_03062021165353_0306f_1622719433_837.jpg)