ETV Bharat / state

மாற்றுத்திறனாளியான கணவருடன் நடந்தே செல்லும் பெண் - மாவட்ட நிர்வாகம் உதவுமா? - 11 Migration workers

கரூர்: மாற்றுத்திறனாளியான கணவரை வீல் சேரில் தள்ளிக்கொண்டு, குழந்தைகளுடன் நடந்துசெல்லும் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் நிலை காண்போரை கவலையடையச் செய்துள்ளது.

Migration workers return to hometown by wheel chair
மாற்றுத்திறனாளியான கணவருடன் நடந்தே செல்லும் பெண் - மாவட்ட நிர்வாகம் உதவுமா?
author img

By

Published : May 11, 2020, 5:12 PM IST

இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாகப் பரவி வரும், இதைத்தடுக்க மே 17ஆம் தேதி வரை, முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க, மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு - குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும், இந்த குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குக்கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துக்கொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலித்தொழிலாளர்கள், முழுமையான ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, தமிழ்நாட்டின் நகரங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பலூன்கள் விற்பனை செய்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சொந்த மாநிலத்திற்கு செல்ல முடிவெடுத்து நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

Migration workers return to hometown by wheel chair
மாற்றுத்திறனாளியான கணவருடன் நடந்தே செல்லும் பெண் - மாவட்ட நிர்வாகம் உதவுமா?

பரமத்திவேலூர் அருகே நெடுஞ்சாலையில் 5 குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளியான தனது கணவர் பூராவை, அவரது மனைவி ஜக்மா வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு செல்வதைக் கண்ட தன்னார்வலர்கள் சிலர் அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு தேவையான உணவை அளித்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னைக்குச் செல்வதாகவும்; அங்கிருந்து இரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்வதாகக்கூறி, தங்களுக்கு உணவளித்த தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லி, தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தன்னார்வலர்கள், 'நாள்தோறும் பலர் இவ்வாறு நெடுஞ்சாலை வழியாக நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த அவர்களுக்கு சென்னைக்குச் செல்ல தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய முன்வர வேண்டும்' விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.