தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர். கள்ளச்சந்தையிலும் மது விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சமீப நாள்களாகப் பல்வேறு இடங்களில் கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்பவர்களும், சாராயம் காய்ச்சுபவர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
அதன்படி கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, தயாரிப்பில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தென்னிலை பகுதி தொட்டம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (39) சாராய ஊறல் பதுக்கியதை ஆய்வாளர் ரமாதேவி தலைமையிலான காவல் துறையினர் கண்டறிந்தனர்.
அவரது வீட்டில் இருந்து 200 லிட்டர் சாராய ஊறல், ஒன்றரை லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இது குறித்து செந்தில்குமாரை கைதுசெய்து, காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது: போலீஸ் விசாரணை!