ETV Bharat / state

'பட்டியல் வகுப்பினரின் இடத்தில் பள்ளி கட்ட பிற சாதியினர் எதிர்ப்பு' - நீதிபதிகள் காட்டம் - madurai bench on school building in panchami land

மதுரை: பட்டியல் வகுப்பினர் தானமாக வழங்கிய இடத்தில் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் கட்ட உத்தரவிடக் கோரிய வழக்கில், அதன் சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

panchami land
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Mar 9, 2021, 6:00 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆண்டியப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,’பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இந்த பள்ளி 2000ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளில் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

2010ஆம் ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டடத்திற்கான இடம் தேவைப்பட்டது. நானும் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த சிலரும் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்குவதாக தலைமையாசிரியரிடம் தெரிவித்தோம். கட்டடம் கட்டுவதற்காக சுமார் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கவில்லை. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை தொடங்கக் கோரி மனு அளித்தோம். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களது பகுதியில் கூடுதல் பள்ளி கட்டடத்தை கட்ட விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது.

தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதனடிப்படையில் நாங்கள் தானமாக வழங்கிய நிலத்தில் கட்டடம் கட்டப்பட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு முழுவதும் தவறானது. ஆகவே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் தானமாக அளிக்கப்பட்ட 1.85 ஏக்கர் நிலத்தில் பள்ளிக்கான கூடுதல் கட்டடத்தை கட்ட உத்தரவிட வேண்டும்’என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. கரூர் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தானமாக வழங்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பள்ளியின் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் பத்திரிக்கை வைத்து வாக்களிக்க அழைப்பு: அடடே ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.