கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர்களை ஆதரித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடையூர், நாகம்பள்ளி, புங்கம்பாடி கிழக்கு, வெஞ்சமாங்கூடலூர், ஈசநத்தம், அம்மாபட்டி, வேலப்பாடி, லிங்கமநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், வார்டு உறுப்பினர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
அப்போது திறந்தவெளி வாகனத்தில் இருந்து பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில், திமுகவைச் சார்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றார். மேலும், 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் இத்தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
வாக்களிப்பதற்கு முன் முதியோர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை தங்களது வேட்பாளரிடம் அளியுங்கள் என்ற அவர், வெற்றி பெற்ற பின் மக்களுக்குத் தேவையான முதியோர் உதவித் தொகை மாவட்ட ஆட்சியரிடம் பேசி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபர்கள் வரைந்த சுவர் ஓவியத்திற்கு வரவேற்பு