ETV Bharat / state

காதல் விவகாரம்: இளைஞர் வெட்டிக்கொலை - காவல்துறையினர் விசாரணை

கரூர்: காதல் விவகாரம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

love-affair-youth-murder
love-affair-youth-murder
author img

By

Published : Jan 6, 2021, 6:56 PM IST

கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன் (22 ). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரனின் நடவடிக்கை சரியில்லாததால் காதலித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஹரிஹரன் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இன்று ஹரிஹரனை காவல் நிலையத்தில் பிடித்து கொடுப்பதற்காக கரூர், ஈஸ்வரன் கோயில் அருகே அப்பெண் வர சொல்லியுள்ளனர். அப்போது ஹரிஹரனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதைக்கண்ட பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட ஐந்து நபர்கள் ஹரிஹரனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளன. இதில் படுகாயமடைந்த ஹரிஹரன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரசித்தி பெற்ற கோயில் வாசல் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மெரினா கரையில் கவிழ்ந்த படகு: ஐந்து மீனவர்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.