கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் இன்று (ஏப் 30) நச்சலூர் பகுதியிலுள்ள காளியம்மன் கோயில் அருகே வாசுதேவன் (45), கண்ணன் (46), புரசம்பட்டி மோகன் (29) ஆகிய மூன்று பேரும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டுகள் விற்பனை
மேலும், அவர்களிடமிருந்த 7,700 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ. 51ஆயிரத்து, 850 பணத்தை பறிமுதல் செய்து மூன்று பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல தோகைமலை அருகேயுள்ள பேரூர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (45), தேவராஜபுரம் பகுதியை் சேர்ந்த ஆறுமுகம் (59)ஆகியோர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை, தோகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயக் கூலிவேலைகளை நம்பியுள்ள மக்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட லாட்டரி, அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.