கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு அருகிலேயே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.
இங்குதான் சென்ற ஆண்டு வாகன தணிக்கையின்போது முறையான வரி மற்றும் விலை பட்டியல் செலுத்தாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலகரி பாரம் ஏற்றியிருந்த லாரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த திடீர் தீ விபத்தின் காரணமாக லாரியின் முன்புறம் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், லாரியில் நிலக்கரி இருந்ததால் தீ மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இருப்பினும், தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.
மேலும், இந்தத் தீ விபத்து ஏற்பட அதில் வைக்கப்பட்டிருந்த நிலக்கரி ஒரு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
அலுவலர்கள் அலட்சியமாக லாரியை நிறுத்தி வைத்ததால் இந்தத் தீ விபத்து ஏற்படுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தத் தீ விபத்து குறித்து தாந்தோனிமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்காக பெண் அடித்துக் கொலை - குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!