ETV Bharat / state

ஏர்கலைப்பையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த விவசாயி!

கரூர்: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏர் கலப்பையுடன் வந்த விவசாயி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Karur Election
Election Farmer Petitioner
author img

By

Published : Dec 14, 2019, 12:55 PM IST

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் வட்டம், முனையனூர் பகுதியில் 5ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுப்புராஜ் என்கின்ற விவசாயி, ஏர்கலைப்பைகளுடன் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

ஏர்கலைப்பையுடன் வேட்பு மனு தாக்கல்

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுப்புராஜ், ‘முன்மாதிரியாக என்னுடைய ஊர் விளங்க வேண்டுமென்று நினைத்துதான் ஏர்கலைப்பையுடன் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தேன். மாநில அளவில் என்னுடைய வார்டினை முன் மாதிரியாக மாற்றுவேன். நான் ஜெயிப்பது நிச்சயம். வருகின்ற 2025ஆம் ஆண்டிற்குள் என்னுடைய பகுதியினை விவசாயத்தில் மிகவும் செழிக்க வைப்பதுதான் எனது லட்சியம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சீனத் தமிழச்சி நிறைமதியின் மதுரை தமிழ்ப் பயணம்!

Intro:ஏர்கலைப்பையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த முன்னோடி விவசாயிBody: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வினோதமாக ஏர் கலப்பையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த விவசாயி.

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆங்காங்கே ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யும் நிகழ்ச்சி மிகவும் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் அடுத்த முனையனூர் பகுதியில் 5 வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுப்புராஜ் என்கின்ற விவசாயி, ஏர்கலைப்பைகளுடன் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏர் கலைப்பையுடன் தாக்கல் செய்த விவசாயியின் செயல் இப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியது. மேலும், அவர் முன்மாதிரியாக என்னுடைய ஊர் விளங்க வேண்டுமென்றும் நினைத்து தான் ஏர்கலைப்பையுடன் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்ததாகவும், மேலும், தமிழக அளவில் என்னுடைய வார்டினை முன் மாதிரியாக மாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நான் ஜெயிப்பது நிச்சயம் என்றும் வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் என்னுடைய பகுதியினை விவசாயத்தில் மிகவும் செழிக்க வைப்பது தான் எனது லட்சியம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார், மேலும் இவரது மனைவி மணவாசி பஞ்சாயத்தில் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.