ETV Bharat / state

தோப்பு வெங்கடாசலம் தலைமையில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு

author img

By

Published : Nov 19, 2019, 8:36 PM IST

கரூர்: பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு நடைபெற்றது.

review

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது. பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சூரிய கூடார உலர்த்தி, பெண் விவசாயி காளியம்மாள் தோற்றத்தில் 900 சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார தேங்காய்பருப்பு உலர்த்தி ஆகியவற்றை மதிப்பீட்டுக் குழு பார்வையிட்டது.

சாதாரணமாக சூரிய வெப்பத்தில் உலர வைக்க ஏற்படும் காலமும், கூலியாட்கள் செலவு வெகுவாக குறையும் என்பதைக் கருத்தில் கொண்டு 60 சதவிகித மானியம் வழங்கி இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகத் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம் , ''டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக சேக்பிட் என்ற கழிவுநீர் உறிஞ்சிக் குழி திட்டம் தமிழ்நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. விவசாயம் அழிவை நோக்கிச் செல்லாமல் பாதுகாக்கும் வகையிலும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் அமைந்துள்ளது'' என்றார்.

சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு

இந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன், கருணாநிதி, நடராஜன், எம்.கே. மோகன், அண்ணா தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:அதிமுக கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரிய கட்சி பாமக -ஜி.கே. மணி

Intro:Body:கரூரில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையிலான ஆய்வுக்குழுவில்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் இன்று வருகை தந்துள்ள உறுப்பினர்கள் விவரம்:

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
குழுவின் தலைவர் . பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், சி.வி.ராஜேந்திரன்,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்,கருணாநிதி
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், நடராஜன்
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ,பெரியபுள்ளான் (எ) செல்வம் மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் ,எம்.கே. மோகன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர்,சிவகுமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 லட்சம் மதிப்பீட்டில் சூரிய கூடார உலர்த்தி கரூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கடம்பன்குறிச்சி பெண் விவசாயி காளியம்மாள் தோற்றத்தில் 900 சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார தேங்காய்பருப்பு உலர்த்திய பார்வையிட்டனர்.

சாதாரணமாக சூரிய வெப்பத்தில் உலர வைக்க ஏற்படும் காலமும், கூலியாட்கள் செலவு வெகுவாக குறையும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் 60 சதவீத மானியம் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

பின்னர் மண்மங்கலத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் செக்பிட் என்ற கழிவு நீர் உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட எம்எல்ஏ வெங்கடாசலம் செய்தியாளரிடம் பேசுகையில்.

கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கும் வகையில் இந்த சேக்பிட் என்ற கழிவு நீர் உறிஞ்சிக் குழி திட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கொசுக்கள் முழுமையாக ஒழிக்கப்படும். மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 8500 ரூபாய் மானியத்தில் தனிநபர்களுக்கு கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைக்க அரசு நிதி வழங்கி வருகிறது

அதே போல விவசாயம் அழிவை நோக்கி செல்லாமல் பாதுகாக்கும் வகையில் முதல்வரின் குடிமராமத்து திட்டம் அமைந்துள்ளது இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது என கூறினார்.

இறுதியாக புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் கல்லூரியை ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது மருத்துவ கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா அவர்களுக்கு விளக்கினார் மேலும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடல் செய்து குறைகளை கேட்டறிந்தார் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

பேட்டி :-
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.