ETV Bharat / state

வதந்தியைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை - கரூர் எஸ்.பி.

கரூர்: கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.

author img

By

Published : Mar 27, 2020, 8:12 AM IST

Legal action will be taken against those spreading rumors on social media about the corona virus

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் பயணிப்போரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து அனுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் குறித்த விழப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடைகளுக்கு வருவோர்களிடம் சமூக இடைவெளி குறித்து எடுத்துரைத்துவருவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 144 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை 35 பேர் கைதுசெய்யப்பட்டு, 20 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வதந்தியைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் தற்போதுவரை யாரும் கரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும், கரோனா வைரஸ் பரவல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இதையும் படிங்க: 'கரோனா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.