ETV Bharat / state

இளம்பெண்ணின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்ட பாலியல் தொழிலாளி கைது

author img

By

Published : Jun 28, 2020, 4:21 PM IST

கரூர் : வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவுவதாகக் கூறி, அவரது வீட்டை பாலியல் தொழிலுக்காகப் பயன்படுத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

Prostitute lady arrested in karur
Prostitute lady arrested in karur

கரூர் மாவட்டம் பசுபதிப்பாளையம் பகுதியில் உள்ள அருணாச்சலம் நகர் ஐந்தாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் ரம்யா (வயது 30).

இவர் ஊரடங்கால் வேலை இழந்து வறுமையில் வாடிய அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு பாராட்டி, அவருடைய வறுமையைப் போக்க உதவுவதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அப்பெண்ணின் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெற்று, அவ்வீட்டை அவருக்குத் தெரியாமல் பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அத்தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் துணை ஆய்வாளர் நாகராஜ் விசாரணை மேற்கொண்டதில், ரம்யா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஊரடங்கால் வறுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி, அவரது வீட்டை பாலியல் தொழில் செய்யும் இடமாக அவர் மாற்றியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ரம்யா மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.