ETV Bharat / state

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பொதுமக்கள் குளித்தலை சார் ஆட்சியரிடம் மனு

கரூர்: குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் குளித்தலை சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சார் ஆட்சியருடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தை

author img

By

Published : Oct 8, 2020, 9:15 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அண்ணா நகர் 4ஆவது தெருவில் ஆதிரா பாபு என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க குழிகள் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதனை தடுத்து நிறுத்தக்கோரி குளித்தலை சார் ஆட்சியர் அப்துல் ரகுமானிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "அதிக திறன்கொண்ட இந்த செல்போன் டவர் கதிர்வீச்சால் கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், இதய நோயாளிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவர். அதனால் செல்போன் டவரை ஊருக்கு வெளிப்புறத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர். பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர், "செல்போன் டவரினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் யாரும் பயப்பட வேண்டாம்" என்று கூறினார்.

சார் ஆட்சியருடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தை
சார் ஆட்சியருடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தை

இதனால், "குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவருக்கு அனுமதி அளிக்க கூடாது" எனக் கோஷங்கள் எழுப்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்பு இது குறித்து விசாரணை செய்வதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அப்பகுதியை விட்டு கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.