கரூர் கிருஷ்ணராயபுரம் தனித்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், வழக்கறிஞர் இலக்கியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (மார்ச் 4) கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட புலியூர் கடைவீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, நாம் தமிழர் கட்சியின் செயல்திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கையை, பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார். குறிப்பாக இவர் வாக்காளர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்வது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பரப்புரை தற்பொழுது நல்லதொரு பேசுபொருள் ஆகியிருக்கிறது.
தேநீர் கடைகளில் அரசியல் பேசும் வாக்காளர்கள் இவரை அன்போடு வரவேற்பதுடன், “கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்ந்த ஒருவருக்கு சீட்டு வழங்க பெற்றிருப்பதே வரவேற்கக் கூடியது, நிச்சயம் ஆதரவு அளிக்கிறோம்” என உறுதியளித்து உற்சாகப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயி சின்னம் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை, நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைபாட்டை மக்களிடம் கொண்டு செல்வதே பிரதான நோக்கம்” என எளிமையாகச் சொல்லி முடித்துவிட்டு, தனது வாக்கு சேகரிப்பு பணியை தொடர்கிறார் வேட்பாளர் இலக்கியா.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலை -கமல்ஹாசன்