ஹைதராபாத்: இந்திய சினிமாவில் பெரும் மதிப்புமிக்கதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மிதுன் சக்கரவர்த்தியின் சினிமாப் பயணம் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக உள்ளது.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி(74) இந்திய சினிமாத்துறைக்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வரும் அக்டோபர் 8ஆம் தேதி தேசிய விருது வழங்கப்படும் நிகழ்ச்சியில் அளிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
Mithun Da’s remarkable cinematic journey inspires generations!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 30, 2024
Honoured to announce that the Dadasaheb Phalke Selection Jury has decided to award legendary actor, Sh. Mithun Chakraborty Ji for his iconic contribution to Indian Cinema.
🗓️To be presented at the 70th National…
1976ஆம் ஆண்டில் தனது சினிமாப் பயணத்தை தொடங்கிய நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ம்ரிகயா (mrigayaa) என்ற கிளாசிக் பாலிவுட் திரைப்படம் மூலம் பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி நடித்த Disco Dancer, Kasam Paida Karne Wale Ki, Commando, OMG: Oh My God ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மிதுன் சக்கரவர்த்தி தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் ஆடியன்ஸை பல தசாப்தங்களாக ஈர்த்துள்ளார். 250 படங்களுக்கு மேல் மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார்.
மேலும் 80களில் வெளியான கிளாசிக் பாடல்களில் தனது நடனம் மூலம் ஆடியன்ஸை கவர்ந்தார். அந்த காலக்கட்டங்களில் மிதுன் சக்கரவர்த்தியின் படங்கள் அனைத்தும் ஹிட்டானது. மிதுன் சக்கரவர்த்தி நடித்த 19 படங்கள் 1989இல் ஒரே வருடத்தில் வெளியானது. இதன்மூலம் ஒரே வருடத்தில் அதிக படங்களை வெளியிட்ட கதாநாயகன் என்ற சாதனையின் மூலம் 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்'ஸில் (Limca Book of Records) இடம்பிடித்தார்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! - Rajinikanth Wishes Udhayanidhi
மிதுன் சக்கரவர்த்தி சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கால் பதித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜ்ய சபா எம்பியாக இரண்டு வருடம் பொறுப்பில் இருந்தார். பின்னர் 2021இல் பாஜகவில் இணைந்தார். முன்னதாக தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கபப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்