சென்னை: மத்திய பட்ஜெட்டில் இறங்குமதி வரி குறைப்புக்கு பிறகு சரிவை சந்தித்த தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஏறுமுகத்தை கண்டது.
உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, இஸ்ரேல் - லெபனான் போர் பதற்றம் உள்ளிட்ட அசாதாரண சூழல் காரணங்களால் தங்கம் விலை பெரும் மாற்றத்தை கண்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே மாதத்தில் சுமார் ரூ.3,000 உயர்வு: சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி கிராம் ரூ.6695-க்கு விற்பனை செய்யப்பட்ட 22 கேரட் தங்கமானது செப்டம்பர் 30-ஆம் தேதியான இன்று காலை நேர வர்த்தகப்படி ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: புத்தாண்டு வரை தேங்காய் விலை உச்சம் தான்.. ஏன்? எப்போது விலை குறையும்?
தங்கத்தை பொருத்தவரையில் ஒரு கிராமுக்கு 385 ரூபாயும், சவரனுக்கு 3,080 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. இதில், கடந்த 27-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவில் உட்சபட்சமாக கிராம் ரூ.7,100-க்கு விற்பனையானது. ஆனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை கண்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொருத்தவரையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றபோதிலும், கடந்த 10 நாட்களாக ஏற்றத்தை சந்தித்துள்ளது. உதாரணமாக செப்.1-ஆம் தேதி கிராம் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளியானது இன்று கிராம் ஒன்று 101 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 1000 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்