கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் என நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ளன. இந்த தொகுதியின் எம்எல்ஏ-ஆக அதிமுகவை சேர்ந்த கீதா மணிவண்ணன் இருந்து வருகிறார்.
சட்டபேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த இவர், தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்குக்கு நேற்று (செப். 14) சென்றார்.
அப்போது அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக கரூர் திரும்பிய எம்எல்ஏ கீதா மணிவண்ணன், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டார்.
இதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தொற்று என்பதால், மருத்துவர்களின் பரிந்துரையின்படி வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மன அழுத்தத்தை குறைக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!