கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிதம்பரம் (38),வளர்மதி மற்றும் மூர்த்தி, ஈஸ்வரி தம்பதியினர். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஈஸ்வரி சிதம்பரத்தை சந்தித்து தனது கணவர் மூர்த்திக்கும், உங்களது மனைவி வளர்மதிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால், மனமுடைந்த சிதம்பரம் கடந்த மூன்று நாள்களாக மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, உடற்கூறாய்வு முடிந்த பிறகு உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
கொடைக்கானலில் அடையாளம் தெரியாத நபர்களால் பெயிண்டர் படுகொலை !