ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தொலைதூர தேர்வாளர்கள் அவதி

author img

By

Published : Dec 13, 2021, 1:16 PM IST

கரூரில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுத சென்ற தொலைதூர தேர்வாளர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

polytecnic
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுத முடியாமல் தவித்தவர்

கரூர்: தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் (TRB) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த நவ.2019 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதற்கான தேர்வு கணினி மூலம் இணையதள தேர்வு எழுதியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தேர்வு அறிவிப்பு

கடந்த நவ.9 ஆம் தேதி மீண்டும் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு டிச.8 முதல் டிச.12 வரை ஐந்து நாட்கள் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இறுதி நாளான நேற்று டிச.12 ஆம் தேதி, கரூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் சுமார் 3,791 தேர்வாளர்களுக்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கணினியில் இணைய வழி தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தேர்வு மையங்கள் ஏற்பாடு

இத்தேர்வில் கரூர் மாவட்ட தேர்வாளர்கள் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வாளர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.என் பொறியியல் கல்லூரி, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள விஎஸ்பி பொறியியல் கல்லூரி மற்றும் சேரன் பொறியியல் கல்லூரி என நான்கு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தேர்வாளர்கள் அவதி

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி தேர்வு மையத்திற்கு புதுக்கோட்டையில் உள்ள விக்னேஷ்வரி என்ற பெண்ணிற்குத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் காலை 4 மணிக்குப் புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட தேர்வாளர் விக்னேஷ்வரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி தேர்வு மையத்திற்கு வர ஐந்து நிமிடம் காலதாமம் ஆனதாகக் கூறப்படுகிறது.

இதனால், அப்பெண் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்திலுள்ள அலுவலர்களிடம் தொலைதூரத் தேர்வாளர்களான தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரியதை அவர்கள் ஏற்க மறுத்ததாக கூறி தேர்வு மைய வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அனுமதி மறுப்பு - கண்ணீர் விட்ட மாணவி

இதுகுறித்து பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை விக்னேஷ்வரி கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகி வந்ததாகவும், தேர்வு எழுத அனுமதிக்காததால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்ததாகவும் பேருந்து இல்லாததால் ஆட்டோவில் 400 ரூபாய் கொடுத்து தேர்வு மையத்திற்கு வந்ததாகவும் விக்னேஸ்வரி கண்ணீர் மல்க கூறினார்.

தேர்வு மையம்

தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள ஏதாவது தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதித்தால் பெண்கள் எளிதாக செல்ல முடியும் எனவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தேர்வு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், இதைப் பற்றி கரூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோது, அவர் தனது அழைப்பை ஏற்கவில்லை எனவும் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதையும் கரூர் ஆட்சியர் பொருட்டாகக் கொள்ளவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

தனிக் கவனம் தேவை

இதேபோல, தேனி, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்த தேர்வாளர்கள் சிலரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளதால் எதிர்வரும் காலங்களில் நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வாளர்களுக்குத் தேர்வு எழுத ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 'மார்கழியில் மக்களிசை 2021': கலந்து கொள்ளும் திரைப்பிரபலங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.