ETV Bharat / state

நகராட்சி அலுவலர்களின் அலட்சியம் - களத்தில் இறங்கிய காவலர்கள் - karur police latest news

கரூர்: சாலையின் நடுவே பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்த உயர்மின் அழுத்தக் கம்பிகளைக் காவல் துறையினர் தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினர்.

program
program
author img

By

Published : Mar 5, 2020, 3:13 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கரூர் வருகைதந்து, சணப்பிரட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்களைத் திறந்துவைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு முதலமைச்சர் வருகைதர உள்ளார். இதனிடையே அப்பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்டிருந்த உயர்மின் அழுத்தக் கம்பிகள் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்தன. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

உயர்மின் அழுத்தக் கம்பிகளை அப்புறப்படுத்தும் காவலர்கள்

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் துறையினர் தாமாக முன்வந்து உயர்மின் அழுத்தக் கம்பிகளை அப்புறப்படுத்தினர். காவலர்களின் இந்தச் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேனாம்பேட்டை கார் ஷோரூம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு - இருவர் தப்பியோட்டம

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.