ETV Bharat / state

திருடப்பட்ட ஏழு ஐம்பொன் சிலைகளை மீட்ட கரூர் காவல் துறையினருக்கு பாராட்டு - karur crime news

கரூர்: பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 35 தங்க நகைகள் மற்றும் ஏழு ஐம்பொன் சிலைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல் துறையினருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட ஏழு ஐம்பொன் சிலைகளை மீட்ட கரூர் காவல்துறையினருக்கு பாராட்டு

author img

By

Published : Mar 14, 2020, 9:04 AM IST

கரூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கோவை ரோடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கரூர் காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களைக் காவல் துறையினர் தேடி வந்தனர். இதனிடையே கரூர் பெரியார் வளைவு அருகில் காவல் துறையினர் வாகன தணிக்கையின்போது, சந்தேகத்தின் பேரில் வந்த ரத்தினகுமார், கஸ்பா இருவரையும் காவல் துறையினர் விசாரித்தனர். இதில் ரத்தினகுமார் மீது சந்தேகம் வர போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

karur police recovery stolen jewellery from police
கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்

அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கருப்பு என்கிற கருப்பசாமி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், பூபதி ஆகியோருடன் இணைந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருப்பசாமி உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 16ஆம் தேதி உயிரிழந்ததும், மோகன்ராஜ் என்பவர் சேலம் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

ரத்தினக்குமார் மற்றும் கருப்பசாமி இருவரும் திண்டுக்கல் மதுரை சாலையிலுள்ள வாடிப்பட்டி பகுதியில் உள்ள பனைமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகளையும், கருப்பசாமி திருடி அந்த இடத்திற்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்திருந்த 7 ஐம்பொன் சாமி சிலைகளையும் (பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர்) கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கரூர் நீதிமன்றம் ரத்தினகுமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது. பூபதியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நகைகளையும் சிலைகளையும், மீட்ட காவல் துறையினருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை - காவல் துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.