கரோனா வைரஸ் (கோவிட்-19) வைரஸ் தொற்று பரவலுக்கு நாடு முழுக்க 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்று கிருமி தாக்கப்பட்ட நபரின் இருமல், உமிழ்நீர் வெளியாதல் மற்றும் கழிவுகள் வழியாகவும் பரவுகிறது.
இதனால் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி தேவை என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்கும் விதமாக ஒருநாள் மக்கள் (ஜனதா) ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று அனைத்து மாநிலங்களிலும் ஒருநாள் ஊரடங்கு இன்று (மார்ச்22) இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முக்கிய மாவட்டங்கள் முடங்கின. அந்த வகையில் கரூரில் அதன் தாக்கம் தெரிந்தது.
அரசின் மக்கள் ஊரடங்கை ஏற்று பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் அமராவதி ஆற்றுப் பாலம், ரவுண்டானா டெக்ஸ்டைல்ஸ் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா: எண்ணிக்கை 7ஆக உயர்வு