கரூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வியாபாரம் செய்துவருவதாக தொடர்ந்து நகராட்சி அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. புகாரையடுத்து அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றிவருகின்றனர்.
அந்தவகையில் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் சாலையில் நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்த இடத்திற்கும் மேல் தவறான முறையில் கடைகள் கட்டி வியாபாரம் செய்துவருவதாக மாவட்ட அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுசம்பந்தமாக பலமுறை அலுவலர்கள் அந்த கடைக்காரர்களை எச்சரித்துள்ளனர்.
அதற்கும் அவர்கள் உடன்படாத நிலையில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட இடங்களை அலுவலர்கள் தலைமையில் ஜேசிபி வாகனங்களுடன் வந்து இடிக்க முயற்சித்தனர். அப்போது வியாபாரிகள் முறையாக நீதிமன்றத்தின் மூலம் கட்டடத்தை இடிக்க அனுமதி வாங்கிவர வேண்டும் என அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியானது தற்சமயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுகாதாரமற்று காட்சியளிக்கும் பாரம்பரியமிக்க ஏவிஎம் கால்வாய்!