கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்பொழுது வரை, கரூர் மாவட்டத்தில் 12 நபர்கள் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கரோனா வைரஸ் மருத்துவ தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்டம், தாந்தோணிமலையைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரூரில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, கரூர் மாவட்டம் தாந்தோணி மலையிலுள்ள செவிலியரின் குடியிருப்புப்பகுதி சுகாதாரத்துறை பணியாளர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 5000-ஐ கடந்த கரோனா!