ETV Bharat / state

தமிழ்நாடு அரசை சாடிய ஜோதிமணி எம்பி - மதுக்கடையை திறப்பது குறித்து அரசை விமர்சித்த எம்பி

கரூர்: மக்களுக்கு உணவு வழங்கினால் தொற்று பரவிவிடும் என தடுத்த அரசு, இன்று தொற்று பரவும் என்று தெரிந்தே மதுக்கடைகளைத் திறக்கிறது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

karur-mp-jothimani-kick-starts-teleponic conversation against tasmac opening

author img

By

Published : May 7, 2020, 9:26 PM IST

தமிழ்நாடு அரசு மதுபான கடைகளைத் திறந்துள்ள நிலையில், கரூர் எம்பி ஜோதிமணி, ஒரு கோடி பெண்களிடம் டாஸ்மாக் திறப்பு குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்து கேட்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்தக் கருத்துகளின் பதிவுகள் அனைத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் நோக்கில் கடந்த 45 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மக்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் தமிழ்நாடு அரசு மதுபான கடைகளைத் திறக்க ஏற்பாடு செய்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

மேலும், “மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கினால் தொற்று பரவிவிடும் என தடுத்த இதே அரசு, இன்று தொற்று பரவும் என்று தெரிந்தே மதுக்கடைகளைத் திறக்கிறது. டாஸ்மாக் திறப்புக்கு எதிராகக் கிராமப்புர பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மாநிலம் முழுவதும் ஒரு கோடி பெண்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு டாஸ்மாக் திறப்பு குறித்து கருத்துக் கேட்டுவருகிறேன். இந்தக் கருத்துகளையும், Change.org என்ற வலைதளம் மூலம் பதிவு செய்யப்படும் கருத்துகளையும் சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பவுள்ளேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.