கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி அடுத்த ஆதியந்தத்தில் சென்று கொண்டிருந்த வாழைக்காய் ஏற்றிவந்த ஈச்சர் லாரியின் ஓட்டுநர் தன்னுடைய கட்டுபாட்டை இழந்ததால், லாரி பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும், 11 பேர் பலத்த காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இறந்தவர்களின் உடலை காவல் துறையினர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.