அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இதில் மின் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், சிஐடியு, ஏஐடியுசி, அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறையினர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
அதில், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு 283, குளித்தலையில் 84, தோகைமலையில் 34, அரவக்குறிச்சியில் 55 பேர் என மொத்தம் 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்கொண்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
பெண்களைக் காக்கும் காவலன் செயலியை பதிவிறக்க நூதன முறையில் விழிப்புணர்வு!