ETV Bharat / state

குளித்தலையில் காளைகளின் சிறப்பான செய்கை!

கரூர்: குளித்தலை அருகே ராச்சாண்டார் திருமலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

jallikkattu
jallikkattu
author img

By

Published : Jan 17, 2020, 12:58 PM IST

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டர் திருமலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 58ஆம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 850க்கும் மேற்பட்ட காளைகளும், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். தற்போது வரை 150க்கும் மேற்பட்ட மாடுகள் வாடிவாசலை விட்டு வெளியேறியுள்ளது. இதில், மூன்று மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காளையர்களை துவம்சம் செய்யும் காளை

ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தி பொதுமக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். வாடிவாசலில் காளைகள் காட்டும் ஆட்டம் காளையர்களை கலக்கமடைய வைத்துள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்வேறு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

'வாவ்... ஜல்லிக்கட்டு!' - அலங்காநல்லூரில் வியந்த வெளிநாட்டினர்

Intro:திருமலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுBody:குளித்தலை அருகே ராச்சாண்டார் திருமலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராச்சாண்டர் திருமலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 58 ஆம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது,  விழாவை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் தோகைமலை தொழிலதிபர் பி ஆர் பி காந்தி மற்றும் விழாக்குழுவினர் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர், விழாவில் 850 க்கும் மேற்பட்ட காளைகளும்,  450 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர், தற்பொழுது 150க்கும் மாடுகள் விடப்பட்டுள்ளது, மூன்று மாடுபிடி வீரர்களுக்கு காயம், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர், மேலும் நடமாடும் மருத்துவமனை உட்பட பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன இதனை காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்து வருகின்றனர், 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்வேறு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டு வருகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.