கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் முத்துச்செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கரோனா சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்: தொலைபேசி மூலம் தகவல்கள் அறியும் மாநகராட்சி!