ETV Bharat / state

கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் மீது புகார் - Widow girl application torn Karur

கரூர்: விதவை உதவித் தொகை விண்ணப்பத்தில் கையெழுத்திட முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை அரசு மருத்துவர் கிழித்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karur Doctor torn widow's application, கரூரில் விதவை பெண் விண்ணப்பம் கிழிப்பு
author img

By

Published : Oct 17, 2019, 11:55 AM IST

கரூர் ஆதி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் சுசீலா (55). இவரது கணவர் சிவானந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். இதையடுத்து அரசு வழங்கும் விதவை உதவித் தொகை பெற சுசிலா விண்ணப்பம் செய்துள்ளார். இதில், விண்ணப்பதாரரின் வயது மற்றும் உடல் நலத்தகுதி குறித்து மருத்துவர் சான்று பெற்று விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மருத்துவர் கையெப்பத்திற்காக சுசிலா இன்று கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஒவ்வொரு மருத்துவராக சென்று கையெழுத்து கேட்டுள்ளார்.

பல மருத்துவர்கள் சுசிலாவுக்கு உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். பிறகு ஒரு வழியாக புவனேஸ்வர் என்ற மருத்துவரிடம் கையெழுத்து வேண்டும் என கேட்டுள்ளார். கையெழுத்திட மறுத்த அவர், விண்ணப்ப படிவத்தை பிடுங்கி துண்டு துண்டாக கிழித்து தூக்கி எறிந்துள்ளார். அதேசமயம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வில் இருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சுசிலா, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

கரூரில் விதவை பெண் விண்ணப்பம் கிழிப்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுசீலா கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவன் இறந்து விட்டார். விதவை உதவித் தொகை கோரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இன்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவரிடம் சான்றொப்பம் பெற வந்திருந்தேன். மருத்துவர்கள் எனக்கு உரிய பதிலளிக்காமல் அலைக்கழித்ததோடு, எனது விண்ணப்பத்தையும் கிழித்துள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்கி சாமியார் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு: 20 கோடி ரூபாய் பறிமுதல்

Intro:விதவை உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட மறுத்த அரசு மருத்துவர் விண்ணப்பத்தை கிழித்தெறிந்த செயலால் பொதுமக்கள் அதிர்ச்சிBody:விதவை உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட மறுத்த அரசு மருத்துவர் விண்ணப்பத்தை கிழித்தெறிந்த செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி

மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சுசிலா புகார் மனு அளித்துள்ளார்..

கரூர் ஆதி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த சுசீலா (55) இவரது கணவர் சிவானந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார்.

இதையடுத்து அரசு வழங்கும் விதவை உதவித் தொகை பெற சுசிலா விண்ணப்பம் செய்துள்ளார். இதில், விண்ணப்பதாரரின் வயது மற்றும் உடல் நலத்தகுதி குறித்து மருத்துத்துவர் சான்று பெற்று விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மருத்துவர் கையெப்பத்திற்காக சுசிலா இன்று கரூர் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரிக்கு சென்று ஒவ்வொரு மருத்துவராக சென்று கையெடுத்து கேட்டுள்ளார்.

பல மருத்துவர்கள் சுசிலாவுக்கு உரிய பதில் அளிக்காமல் அலையவிட்டுள்ளார்கள்.

பிறகு ஒரு வழியாக அங்கிருந்த மருத்துவர் புவனேஸ்வர் என்ற மருத்துவரிடம் கையெழுத்து வேண்டும் என கேட்டுள்ளார். கையெழுத்திட மறுத்த அவர், விண்ணப்ப படிவத்தை பிடுங்கி துண்டு துண்டாக கிழித்து தூக்கி எறிந்துள்ளார்.

அதேசமயம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் மருத்துவமனை வளாகத்தில் இருந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் சசிலா கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம் சுசீலா தனக்கு நடந்த கொடுமையை எடுத்துக் கூறினார்.

அரசு மருத்துவரின் மனித நேயமற்ற இந்த செயலால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுசீலா கூறுகையில்;

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவன் இறந்து விட்டதால் விதவை உதவித் தொகை கோரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் அதிகாரி ஊர் பொதுமக்கள் வாக்குமூலம் என அனைத்தையும் பெற்றுக்கொண்டு இன்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு மருத்துவரிடம் சான்றொப்பம் பெற வந்திருந்தபோது கடந்த ஒன்றரை மணி நேரமாக அலைக்கழிக்கப்பட்ட பிறகு மருத்துவர் புவனேஸ்வர் அவர்களிடம் கையப்பம் பெறச் சென்றேன்.

திடீரென தனது விண்ணப்பத்தை கிழித்தெறிந்து கையில் கொடுத்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

தற்பொழுது வேறு ஒரு மருத்துவர் மூலம் கையொப்பம் பெற்று தருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும் புதிதாக விண்ணப்பம் பெற்று மீண்டும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரி ஊர் பொது மக்கள் வாக்குமூலம் பெற்று தான் விண்ணப்பத்தில் மருத்துவர் கையொப்பம் பெறமுடியும்.

தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது.

சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் சுசீலா.

பேட்டி: சுசிலா பாதிக்கப்பட்ட பெண்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.