ETV Bharat / state

”நீ எல்லா இடத்திலேயும் பிரச்னை பண்ற, உன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பேன்” - விவசாயியை மிரட்டிய கரூர் கலெக்டர்! - கரூர் மாவட்ட செய்தி

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த விவசாயி ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பேன் என மாவட்ட ஆட்சியர் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விவசாயியை மிரட்டிய கரூர் ஆட்சியர் ஆடியோ வைரல்

author img

By

Published : Jun 17, 2023, 9:45 AM IST

விவசாயியை மிரட்டிய கரூர் ஆட்சியர் ஆடியோ வைரல்

கரூர்: ஆண்டிசெட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து, தென்னிலை கரை தோட்டத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பணிகளை துவக்கி உள்ளது. இதற்காக ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை உயர் மின் கோபுரங்கள் மூலம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டும் வருகிறது.

சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படும் இப்பணிகளால் தென்னிலை சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் அரசு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளிடம் முறையாக வழங்காமல் பணிகளை துவக்கி உள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிர்வாகி விவசாயி ராஜா மே 8ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

8 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் உடல்நிலை மோசமாகி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதால் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். இதனிடையே தென்னிலை மீனாட்சி வலசு பகுதியில் பெண் விவசாயி கலையரசி என்பவர், எட்டாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி ராதாமணி என்பவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே புகலூர் தாலுகா, தென்னிலை கூனம்பட்டி பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயி ராஜா என்பவர், கடந்த 14ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் ஒன்றைத் தெரிவிப்பதற்காக போன் செய்துள்ளார். அப்போது விவசாய சங்க பிரதிநிதியான ராஜாவை, கரூர் கலெக்டர் பிரபுசங்கர், ”குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன்” என மிரட்டும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் பேசும் ஆடியோவில், ”விவசாயி ராஜா உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள அனுமதிப்படி, கரூர் மாவட்டம் புகலூர் வட்டம், தென்னிலை மேல்பாகம் கூனம்பட்டி சர்வே எண்:446இல் மட்டுமே மின்வாரிய ஒப்பந்ததாரர் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். மாறாக சர்வே எண் 445இல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளதாக” கூறுகிறார்.

அதைக் கேட்டுக் கொண்ட கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர், '' உன் மீது எண்ணற்ற புகார்கள் வந்துள்ளது. எனவே காவல்துறை மூலம் உன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுவேன். நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் எச்சரிக்கையாகவே கூறுகிறேன். உங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன். எங்கு பார்த்தாலும் பிரச்னை செய்வதாக 15 புகார்கள் வந்துள்ளன. குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளும் அளவிற்குப் போதுமான புகார்கள் உள்ளன. விவசாயி என்ற போர்வையில் போராட்டங்கள் செய்வது சரியல்ல.

நல்லெண்ண அடிப்படையில் எச்சரிக்கிறேன். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். இதையும் ரெக்கார்டிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பினால் மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்'' என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் கூறும் வகையில், ஆடியோவில் உரை உள்ளது.

இதுகுறித்து விவசாயி ராஜா கூறுகையில், ”விளைநிலங்களில் அரசு உயர் மின் கோபுரங்கள் அமைக்க பதினைந்து கி.மீ., தொலைவு திட்டம் வகுத்துள்ளது. மாறாக 11 கி.மீ., தொலைவில் இதனை அமைக்க முடியும். ஆனால், ரியல் எஸ்டேட் அதிபர்கள் பயன் பெறும் வகையில் விவசாய விளைநிலத்தில் கூடுதலாக 5 கி.மீ., தொலைவு திட்டம் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்க இருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை குறித்த முழு விவரங்களை விவசாய நில உரிமையாளர்களிடம் தெரிவிக்காமல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ள விளை நிலங்களில் மட்டுமே தற்போது பணிகள் நடைபெற வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்காத ஆட்சேபனைகள் உள்ள விளைநிலங்களில், மின்சார வாரிய ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்வது குறித்து புகார் தெரிவிக்கவே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசியதாக” விளக்கம் அளித்தார்.

மேலும் ஆடியோவை வெளியிட்ட விவசாயி ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்கவும்; காவல்துறை முயன்று வருவதாக, சமூக செயல்பாட்டளரும் சாமானிய மக்கள் நலக் கட்சி கரூர் மாவட்ட தலைவருமான சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு மீண்டும் வருமான வரித்துறையினர் சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.