கரூர்: கரூர் மாவட்டம் அருகே ராமமூர்த்தி மகன் சூரிய பிரகாஷ் என்கிற சூர்யா (22). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 10 வயது சிறுமியை எமாற்றி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தால், கொலை செய்வது விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். வீடு திரும்பிய சிறுமி தனது தாயாரிடம் நடந்துவற்றை கூறியுள்ளார்.
சிறுமியின் தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தார். குற்றவாளியை கைது செய்து சிறுமிக்கு போதிய மருத்துவ சிகிச்சையும் மனநல ஆலோசனையும் வழங்கவும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சாட்சியங்கள் ஆகியவற்றை குறுக்கு விசாரணை நிறைவுற்று இறுதி தீர்ப்பினை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு வழங்கினார்.
இந்த தீர்ப்பில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு மெய்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பினை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூபாய் மூன்று லட்சம் வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிக்கு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக, போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி-என்பிடெல் இணைப்பு - ஆன்லைன் மூலம் 720 சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்!