கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா ஒருவர்கூட இல்லாமல் இருக்கக்கூடாது. அதுவே, அரசாங்கத்தின் திட்டம்.
இன்னும், மூன்று மாத காலத்திற்குள் வீடு இல்லாத ஆதரவற்றவர்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வீடு பெற்றுத்தரப்படும். உடனடியாக கரூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து விளம்பர பேனர்கள் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது எனச் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
"உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள், பொது இடங்களில் உள்ள விளம்பர பேனர்கள் அனைத்தும் அகற்றப்படும்" என்றார்.
கரூரில் பல இடங்களில் நெகிழி அதிகரித்துவருவதைக் காணமுடிகிறது என்று சொன்ன ஆட்சியர் மலர்விழி, அதனையும் கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.