கரூர்: கரூர் மாவட்டத்தில் 55 நாள்கள் ஊரடங்குக்கு பிறகு மதுபான கடைகள் இன்று (ஜூலை 5) திறக்கப்பட்டன. 93 மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இயங்கத் தொடங்கின. இதேபோல, கரூர் நகர பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் என 205 பேருந்துகள் நான்கு போக்குவரத்து மண்டலங்களில் இயக்கப்பட்டது.
இதனை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது, கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மதுபானக் கடையை பார்வையிட சென்றார்.
மாவட்ட ஆட்சியரின் அறிவுரை
அங்கு விற்பனையாளர், மேற்பார்வையாளர் தவிர திமுக கரை வேட்டி கட்டிய நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், "மாவட்ட ஆட்சியர் மதுபானக் கடைகளுக்குள்ளே கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. கரை வேட்டி கட்டிக்கொண்டு மதுக்கடைகளுக்கு நுழைவது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தாதா" என அறிவுரை வழங்கினார்.
மதுக்கடையில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது, கட்சிக்காரரிடம் மாவட்ட ஆட்சியர் கறார் காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் மீதுதான் அரசுக்கு அக்கறையா - சமூக ஆர்வலர்கள் வேதனை