ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதல் முதல் நாளில் தேங்காய் சுடும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், கரூர் மக்கள் தேங்காய் சுட்டு ஆடி பிறப்பின் முதல் நாளை வரவேற்றனர். அமராவதி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற தேங்காய் சுடுதல் விழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கூறியதாவது, "ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த நாள். இந்த முதல் நாளில் தேங்காய்க்குள் நாட்டுச் சக்கரை, பச்சைப்பயிறு, பச்சரிசி ஏலக்காய், எள்ளு போன்றவற்றை வைத்து பூரணமாக தயாரித்து அதனை நெருப்பில் சுட்டு அம்மனுக்கு படையலிட்டு அதனை உண்டு வருகிறோம்.
இதனை எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து செய்து வருகிறோம். அமராவதி என்பது ஒரு பெண் தெய்வத்தை குறிக்கின்றது. அதனால் ஆற்றுப் பகுதிகளில் தீயை பயன்படுத்தி தேங்காயை வாட்டி சுட்டு அம்மனுக்கு படையலிட்டு வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பெண்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு - சக்தி பஹினி எச்சரிக்கை!