கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 161 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்தமாக கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, இந்திய கணசங்கம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சாமானிய மக்கள் கட்சி உள்ளிட்ட சுயேச்சைகள் என மொத்தம் 161 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கரூர் தொகுதியில் மட்டும் 77 பேர் போட்டியிடுவதால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் நோட்டா வாக்கையும் சேர்த்து 16 சின்னங்கள் வேட்பாளர்கள் பெயர்களோடு இடம்பெறவிருப்பதால், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். தவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடன் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் பொதுச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ’கழுதையுடனா கூட்டணி வைப்பது...’ - தேமுதிக-அமமுக கூட்டணியைத் தாக்கும் புகழேந்தி