தமிழ்நாட்டில் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய இரு தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் மாவட்ட ஊராட்சிக் குழு முதலாவது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் கமலக்கண்ணன், பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதியிலுள்ள கார்விழி நீர்த்தேக்க அணையில், நீதிமன்ற தடையாணையால் கடந்த 20 ஆண்டுகளாக நீரை சேமிக்க முடியாத நிலை இருந்தது.
தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முயற்சியால் நீதிமன்ற தடை திரும்பப் பெறப்பட்டு, தற்போது அணையில் முழு அளவில் நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்குள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அணையை சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை" என்றார்
மேலும், இதனை கருத்தில்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் வெற்றிபெற்றபின் நிச்சயமாக நீர்த்தேக்கப் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: இரவு பகலாக இயங்கும் அச்சகங்கள்: கட்சி சின்னங்களை பொதுமக்களிடம் சேர்க்க துடிக்கும் வேட்பாளர்கள்!