ETV Bharat / state

மதுபோதையால் நேர்ந்த விபத்து - ஒருவர் உயிரிழப்பு - Karur district News

கரூர்: மதுபோதையில் இளைஞர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karur accident News
Karur accident News
author img

By

Published : Sep 23, 2020, 4:38 PM IST

கரூர் வடக்கு காந்திகிராமம் அன்பு நகரைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ், ஆனந்த். இவர்கள் இருவரும் நேற்று (செப்.23) மாலை மதுபோதையில் தங்களுக்குச் சொந்தமான காரில் காந்திகிராமத்தில் வலம் வந்ததாகத் தெரிகிறது.

இரவு சுமார் 11 மணியளவில் அவர்கள் சென்ற கார் அந்தப் பகுதியில் விபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தப் பகுதியில், சாலையில் இருந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது இளைஞர்கள் தாறுமாறாக ஓட்டிச்சென்ற கார் சாலையோரத்தில் இருந்த கரும்புச்சாறு பிழியும் இயந்திரம் மீது மோதி அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஆகாஷ் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞரான ஆனந்த் பலத்த காயங்களுடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆகாஷ் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் சிறையிலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.