ETV Bharat / state

காப்பான் படம் கொண்டாட்டம்: படம் பார்த்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ரசிகர்கள்

author img

By

Published : Sep 21, 2019, 10:41 AM IST

கரூர்: சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் காப்பான் திரைப்படம் வெளியானதையடுத்து திரையிலிருந்து திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காப்பான் திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ரசிகர்கள்

கரூர் மாவட்ட சூர்யா தலைமை ரசிகர் மன்றம் சார்பில் மாவட்ட திரையரங்கில் வெளியான சூர்யா நடித்த காப்பான் திரைப்பட முதல் காட்சிக்கு வருகைதந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி திரைப்படம் வெளியானதை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர் ரசிகர் மன்றத்தினர்.

இது குறித்து சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி கூறும்போது, "சமீபத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை அடுத்து திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, திரைப்படம் வெளியாகும் நாட்களில் பிளக்ஸ் பேனர் வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று நடிகர் சூர்யா உள்பட முன்னணி நடிகர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

எனவே சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வெற்றியடைய வேண்டி பொதுமக்களுக்கு இலவசமாக பயன்தரும் மரக்கன்றுகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். தொடர்ந்து சூர்யா ரசிகர் மன்றத்தினர் கல்வி உதவிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இயற்கை வளங்களை பேணிக்காக்க மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்துவோம்" என உறுதியளித்தனர்.

இதையும் படிங்க: "ஆபிஸ்ல பிரதமர் ஒழுங்காதான் இருப்பார்": கொளுத்திப்போட்ட கே.வி. ஆனந்த்! #Interview

Intro:கரூரில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிBody:கரூரில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் காப்பான் திரைப்படம் வெளியானதையடுத்து திரையிலிருந்து திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது.

கரூர் மாவட்ட சூர்யா தலைமை ரசிகர் மன்றம் சார்பில் கரூர் திரையரங்கில் இன்று வெளியான சூரியா நடித்த காப்பான் திரைப்பட முதல் காட்சிக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி திரைப்படம் வெளியானதை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி கூறுகையில் சமீபத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை அடுத்து திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, திரைப்படம் வெளியாகும் நாட்களில் பிளக்ஸ் பேனர் வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் சூர்யா உட்பட முன்னணி நடிகர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

எனவே இன்று சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி பொதுமக்களுக்கு இலவசமாக பயன்தரும் மரக்கன்றுகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தொடர்ந்து சூர்யா ரசிகர் மன்றத்தினர் கல்வி உதவிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இயற்கை வளங்களை பேணிக்காக்க மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்துவோம் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.