ETV Bharat / state

கபடி விளையாட்டின் போது மாரடைப்பால் உயிரிழந்த வீரர்.. கரூரில் நிகழ்ந்த சோகம்! - mk stalin

கரூர் குளித்தலை அருகே நேற்று இரவு நடைபெற்ற கபடி போட்டியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

குளித்தலையில் விளையாட்டின்போது கபடி வீரர் மாரடைப்பால் மரணம்!

author img

By

Published : Feb 20, 2023, 1:14 PM IST

கரூர்: குளித்தலை அருகே உள்ள கணக்குப்பிள்ளையூரில் நேற்று (பிப்.19) இரவு கபடிப் போட்டி நடைபெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற 2 போட்டிகளில் பங்கேற்ற வீரர் ஒருவர், 3வது சுற்றுக்காகக் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அய்யர் மலையில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல்சிகிச்சைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த குளித்தலை காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த கபடி வீரர், திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே உள்ள காசாக்காரன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் (26) என்பது தெரிய வந்துள்ளது. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மாணிக்கம், தந்தையை இழந்த நிலையில், தாய் மற்றும் சகோதரி உடன் வசித்து வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ளூர் கபடி விளையாட்டு குழுவில் பங்கேற்று விளையாடி வந்த மாணிக்கம், ஆர்வமாக பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கபடிப் போட்டியில் கோப்பை மற்றும் பரிசுகளை வென்று வந்துள்ளார்.

  • கரூர் மாவட்டம், மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN l #TNDIPR l@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/c5bkANJIec

    — TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கம் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகள்.. நாடகம் அம்பலமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.