ETV Bharat / state

வீட்டின் கதவை உடைத்து 55 சவரன் நகைகள் திருட்டு! - 55 சவரன் நகைகள் திருட்டு

கரூர்: விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் நிலையத்தின் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 55 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத கும்பல் திருடிச் சென்றுள்ளது.

நகைகள் திருட்டு நடந்த வீடு
நகைகள் திருட்டு நடந்த வீடு
author img

By

Published : Feb 6, 2020, 7:52 PM IST

கரூர் நகரில் உள்ள பிரபல விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் நிலையத்தின் உரிமையாளர் சுரேஷ் (48). இவர், வடிவேல் நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் மனைவி மதுமிதா, மாமியார் அங்கம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கடை நிர்வாகத்தை சுரேஷ், அவரது மனைவி ஆகிய இருவரும் கவனித்துக் கொள்வதால், தினசரி இருவரும் காலை 9 மணிக்கு கடைக்குச் சென்று விடுவார்கள். வீட்டில் சுரேஷின் மாமியார் மட்டுமே இருப்பார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த சுரேஷின் மாமியர் வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த அடையாளாம் தெரியாத கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய மாமியார், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சுரேஷுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்த அவருக்கு, வீட்டில் 55 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய காவல் துறையினர், விசாரணையின் முதற்கட்டமாக அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைகள் திருடப்பட்ட வீடு

இதையும் படிங்க: பட்டபகலில் இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காணொலி வெளியீடு

Intro:வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனர்.
Body:கரூரில் உள்ள பிரபல விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டுக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் நகரில் உள்ள பிரபல விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் சுரேஷ் (48). இவரது வீடு கரூர் அடுத்த வடிவேல் நகரில் தனக்கு சொந்தமான வீட்டில் மனைவி மதுமிதா மற்றும் மாமியார் அங்கம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கடை நிர்வாகத்தை சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கவனித்துக் கொள்வதால், தினசரி இருவரும் காலை 9 மணிக்கு கடைக்கு சென்று விடுவார்கள். வீட்டில் சுரேஷின் மாமியார் மட்டுமே இருப்பார்.

இந்நிலையில் இன்று காலை வீ்ட்டில் இருந்த சுரேஷ் மாமியர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, காரில் வந்த மர்மக் கும்பல் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 55 புவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய மாமியார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து சுரேஷ் க்கு தகவல் அளித்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த சுரேஷ் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது

இது குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலையப் போலீஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.