ETV Bharat / state

ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகாரில் விசாரணை : கைது செய்ய வாய்ப்பு ? - கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

பிரபல நடன கலைஞர் ஜாகிர் உசேன் மீது இசைப்பள்ளி ஆசிரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விசாரணையை தொடங்கினார்.

ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகாரில் விசாரணை : கைது செய்யப்பட வாய்ப்பு ? investigation-into-complaint-against-zakir-hussain-at-karur-all-women-police-station ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகாரில் விசாரணை : கைது செய்யப்பட வாய்ப்பு ?

author img

By

Published : May 3, 2022, 1:01 PM IST

கரூர் மாவட்ட இசை பள்ளியில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் ஆய்வு செய்ய சென்ற போது பரத நாட்டிய ஆசிரியையிடம் தவறாக நடந்து கொண்டதாக தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியை புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக விஷாக கமிட்டி விசாரணை ஏப்.8, ஏப்.22 தேதிகளில் 2 கட்டமாக சென்னையில் நடைபெற்றது. இதனிடையே ஏப்ரல் 28 ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை ஜாகிர் உசேன் மீது புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரூபி கரூர் மாவட்ட இசைப்பள்ளியில் நேற்று (மே.2) தேதி விசாரணையைத் தொடங்கினர்.

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்
கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

அதனை தொடர்ந்து இன்றும் (மே.3)விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் அடிப்படையில் இசைப்பள்ளியில் ஆசிரியையிடம் தனி அறையில் விசாரணை நடைபெற்றது. மேலும் இசைப் பணியாற்றும் சக ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் ஜாகிர் உசேன் ஆய்வுக்கு வந்த பொழுது நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார்
புகார்

மேலும் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபல நடன கலைஞர் ஜாகிர் உசேன்னுக்கு அழைப்பாணை அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால் ஜாகிர் உசேன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

புகார்
புகார்

இது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது விசாரணை நடைபெற்று வருகிறது. காலதாமதமாகப் புகார் தரப்பட்டுள்ளது. அதன் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாலியல் புகார்: நடன கலைஞர் ஜாகிர் உசேன் கூறுவது என்ன?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.