ETV Bharat / state

எல்.ஆர்.ஜி நாயுடு சுழற்கோப்பையை கைப்பற்றிய இந்திய கடற்படை அணி!

கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் லோனவ்லா இந்திய கடற்படை அணி, இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

எல்.ஆர்.ஜி நாயுடு சுழற்கோப்பையை கைப்பற்றிய இந்திய கடற்படை அணி!
எல்.ஆர்.ஜி நாயுடு சுழற்கோப்பையை கைப்பற்றிய இந்திய கடற்படை அணி!
author img

By

Published : May 28, 2022, 10:44 PM IST

கரூர்: 2ஆவது எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு ஆண்கள் சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள், கடந்த மே 21 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை கரூரில் உள்ள திருவள்ளூர் மைதானத்தில் நடைபெற்றன.

இந்தப் போட்டிகள் லீக் அவுட் மற்றும் நாக் - அவுட் என்ற முறையில் நடைபெற்றன. இப்போட்டியில் புதுடெல்லி விமானப்படை, சென்னை இந்தியன் வங்கி, கேரளா போலீஸ், இந்திய கடற்படை, சென்னை வருமான வரித்துறை அணிகள் உள்ளிட்ட 10 ஆண்கள் கூடைப்பந்து அணிகள் பங்கேற்றன.

இவற்றில் லீக் மற்றும் நாக் அவுட் பிரிவுகளில் தலா ஐந்து அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு, காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த போட்டியைக் காண்பதற்கு, உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என இந்தியா முழுவதிலிருந்தும் வந்தனர்.

எல்.ஆர்.ஜி நாயுடு சுழற்கோப்பையை கைப்பற்றிய இந்திய கடற்படை அணி!

இந்நிலையில், நேற்று (மே 27) மாலை நடைபெற்ற அரையிறுதி போட்டியைக் காண கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், துணை ஆட்சியர் சைபுதீன், கூடைப்பந்து கழகத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி அணியும் லோனவ்லா இந்திய கடற்படை அணியும் மோதியது. விறுவிறுப்பான இந்த போட்டியின் முடிவில், இந்தியன் வங்கி அணி 85 புள்ளிகள் பெற்றது. ஆனால், 92 புள்ளிகள் பெற்ற லோனவ்லா இந்திய கடற்படை அணி சுழற்கோப்பையை கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற லோனவ்லா இந்திய கடற்படை அணிக்கு எல்.ஆர்.ஜி நாயுடு சுழற்கோப்பை மற்றும் முதல் பரிசுத் தொகையாக ரூ.50,000 ஐ கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, 2 வது இடம் பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத் தொகையாக ரூ.30,000, 3 வது இடம் பெற்ற சென்னை விளையாட்டு விடுதி அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.25,000 பரிசுத்தொகையும், 4 வது இடம் பெற்ற புதுடில்லி இந்திய விமானப்படை அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.20,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: IPL 2022 Qualifier 2: பொளந்து கட்டிய பட்லர்; பாவம்‌ பெங்களூரு - பைனலில் ஆர்ஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.