கரூர் மாவட்டத்தில் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்குவது காவிரி, அமராவதி ஆறுகள். இங்குள்ள காவிரி ஆறானது கிருஷ்ணராயபுரம், குளித்தலை, லாலாப்பேட்டை போன்ற பகுதிகளுக்கும், அமராவதி ஆறு அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், சின்ன ஆண்டான்கோயில் போன்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டுவருகிறது.
உடுமலைப் பேட்டையில் உள்ள அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துவருகிறது. இதனால் மக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
குறிப்பாக அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக இருந்துவரும் நிலையில் தற்போது அமராவதி தண்ணீர் மூலம் கிடைக்கும் குடிநீரால் அம்மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் அமைந்துள்ளது.
மேலும், அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதன் மூலம் அரவக்குறிச்சி பகுதியில் இருக்கக்கூடிய முருங்கை விவசாயம், சின்ன தாராபுரம் பகுதியில் இருக்கக்கூடிய விவசாய நிலங்கள் பெரிதும் பயனடைகின்றன.
இதையும் படிங்க: ‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளை சேருங்கள்!’ - விவசாயிகள் கோரிக்கை