ETV Bharat / state

கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி - முதலமைச்சர் திறந்து வைத்தார்

கரூர்: காந்தி கிராமம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

new Medical College
author img

By

Published : Jul 31, 2019, 5:13 PM IST

கரூர் மாவட்டம், காந்தி கிராமம் பகுதியில் ரூ.269.69 கோடி மதிப்பீட்டில் சுமார் 27.49 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயல் கூடம், நிர்வாக கட்டடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர்கள் குடியிருப்பு, செவிலியர் விடுதி, உறைவிட மருத்துவ அலுவலர், உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடியிருப்புகளும் உள்ளன. இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

புதிய மருத்துவ கல்லூரியை திறந்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கரூர் மக்களின் நலனை கருத்தில்கொண்டு அமைத்துக் கொடுத்த, இந்த மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது திறந்து வைத்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது போல் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் இந்த மருத்துவமனையில் பொருத்தியமைக்கும் நன்றி” என்றார்.

Intro:
கரூரை அடுத்த காந்திகிராமம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர்.விஜய பாஸ்கர் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்Body:

கரூரை அடுத்த காந்திகிராமம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர்.விஜய பாஸ்கர் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

ரூபாய் 269. 69 கோடி மதிப்பீட்டில் சுமார் 27.49 பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயல் கூடம் ,நிர்வாக கட்டடம், மாணவர்கள் தங்கும் விடுதி, மாணவியர் தங்கும் விடுதி ,முதல்வர் குடியிருப்பு ,மருத்துவ ஆசிரியர்கள் குடியிருப்பு, செவிலியர் விடுதி ,உறைவிட மருத்துவ அலுவலர், உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர், மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடியிருப்புகளும் இந்த மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நாளை முதல் மருத்துவ கல்லூரி வகுப்புகள் துவங்கும் என்றும், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கரூர் மக்களின் நலன் கருதி அமைத்துக் கொடுத்த இந்த மருத்துவ கல்லூரியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமைத்துக் கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், முதல்கட்டமாக சென்னை நகரில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது வடபழனி போக்குவரத்து பணிமனையில் சுற்று சுவர் இடிந்து விழுந்த சம்பவம் எதிர்பாராத விபத்து மேலும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அதை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கப்பட உள்ளது தொடர்ந்து படிப்படியாக இந்த வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்படத் துவங்கும் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.