கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் மட்டும் 1,045 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் இறுதியில் கரூர் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 986. அதேசமயம், கடந்த 5 நாள்களில் மட்டும் புதிதாக 1,045 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அதாவது, ஏப்ரல் 30ஆம் தேதி 176 பேருக்கும், மே ஒன்றாம் தேதி 175 பேருக்கும், மே இரண்டாம் தேதி 241 பேருக்கும், மே மூன்றாம் தேதி 229 பேருக்கும், மே நான்காம் தேதி 269 பேர் என மொத்தம் நான்கு நாள்களில் மட்டும் புதிதாக 1045 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சுமார் 635 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் மே நான்காம் தேதி மட்டும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், இதுவரை 8 ஆயிரத்து 485 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு 7 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் கரூர் மாவட்டத்தில் 62 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால், தகுந்த இடைவெளியின்றி வெளியே சுற்றித் திரியும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கரோனா சிகிச்சை மையங்களில் மூன்ராம் தேதி நிலவரப்படி 483 படுக்கைகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரிக்கும்.
எனவே மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு மம்தா பானர்ஜிதான் காரணம்' - ஹெச். ராஜா!