ETV Bharat / state

அரசு நிலம் ஆக்கிரமிப்பு; வழக்குத் தொடர்ந்த தந்தை, மகன் வெட்டிக் கொலை!

கரூர்: அரசு நிலம் ஆக்கிரமைப்பு தொடர்பாக புகார் அளித்த தந்தை, மகனை கொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

தந்தை-மகன் வெட்டிக் கொலை
author img

By

Published : Jul 30, 2019, 1:59 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான குளம் உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்துவந்திருக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த ராமர் என்கிற வீரமலை (60), அவரது மகன் நல்லதம்பி (40) ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் வீரமலையை அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் - அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கரூரில் தந்தை-மகன் வெட்டிக் கொலை

தொடர்ந்து அவரது மகனை அந்த கும்பல் தேடிக்கொண்டிருந்தபோது, நல்லதம்பி கீழமேடு என்ற இடத்தில் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் நல்லதம்பியும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இது குறித்து தகவலறிந்த குளித்தலை காவல் துறையினர் இருவேறு இடங்களில் இருந்த உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:
நிலம் ஆக்கிரமைப்பு சம்பந்தமாக புகார் அளித்த இருவர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல். குற்றவாளிகள் தப்பியோட்டம். கரூர் அருகே பரபரப்புBody:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 50க்கும் மேற்பட்டோர் இந்த குளத்தில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த ராமர் என்கிற வீரமலை(60), அவரது மகன் நல்லதம்பி(40) ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் வீரமலையை அவரது வீட்டின் அருகே பம்புசெட் அருகே இருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் அவரது மகனை அந்த கும்பல் தேடியது. இதில் அருகில் உள்ள கீழமேடு என்ற இடத்தில் உள்ள வாட்டர் டேங்க் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த நல்லதம்பியை மறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.