சுதந்திர போராட்டத்திற்கு தன்னுயிரை ஈத்த கொடிகாத்த குமரனின் 88ஆவது நினைவு நாள் இன்றாகும். இந்நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திருப்பூர் குமரனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் ஜவகர் பஜார் வீதியில் உள்ள கொடிகாத்த குமரனின் சிலைக்கு செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு திருப்பூர் குமரனை போற்றும் வகையில் வீர முழக்கங்கள் எழுப்பினர்.
பின்பு செய்தியார்களை சந்தித்த செங்குந்தர் இளைஞர் பேரவையின் செயலாளர் மோகன்ராஜ், தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்டத்தில் கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:
விண்ணில் ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டும் விஞ்ஞானி இல்லை - மயில்சாமி அண்ணாதுரை